Enable Javscript for better performance
அழகப்பா பல்கலை.யில் கருத்துப் பட்டறை- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இளைஞர் செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மாநில அமைப்பு சார்பில், இளைஞர் செஞ்சி லுவைச் சங்க திட்ட அலுவலர்களுக்கு ஒரு நாள் கருத்துப் பட்டறை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    தொடக்க விழாவில், பல்கலைக்கழகத்தின் மேலாண்மையியல் புல முதன்மையர் வெ. மாணிக்கவாசகம் தலைமை வகித்துப் பேசுகையில், இளைஞர்கள் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி சமூக சேவைகள் ஆற்ற முன்வரவேண்டும் என்றார். இதில், வணிகவியல் துறைத் தலைவர் டி.ஆர். குருமூர்த்தி, செஞ்சிலுவைச் சங்க சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டி. சித்ரா ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை, இளைஞர் செஞ்சிலுவைச் சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் ஆ. குருபாண்டி செய்திருந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai