Enable Javscript for better performance
காரைக்குடியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 8 வீடுகள் சேதம்: ரூ.6 லட்சம் பொருள்கள் கருகின- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடியில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 8 வீடுகள் சேதம்: ரூ.6 லட்சம் பொருள்கள் கருகின

    By DIN  |   Published on : 08th October 2016 12:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி பாப்பா ஊருணி பகுதியில் வெள்ளிக்கிழமை எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில், 8 வீடுகள் சேதமடைந்தன.
    பாப்பா ஊருணி பகுதியில் பழைய துணிகளுக்கு சாயமேற்றும் தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியம் (45) என்பவரது வீட்டில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மின்கசிவு ஏற்பட்டு, வீட்டிலிருந்த எரிவாயு சிலிண்டர் வெடித்து தீப்பற்றி எரிந்தது. தீயானது அருகிலுள்ள வீடுகளுக்கும் பரவி, மொத்தம் 8 வீடுகள் சேதமடைந்தன. வீடுகளில் இருந்த பாத்திரங்கள், இரு சக்கர வாகனங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் என சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான பொருள்களும் எரிந்து கருகின. தகவலறிந்ததும், காரைக்குடி தீயணைப்பு மற்றும் மீட்புப்படை நிலைய அலுவலர் ஆறுமுகம் தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். சம்பவ இடத்துக்கு காரைக்குடி நகர்மன்றத் தலைவர் (பொறுப்பு) சோ. மெய்யப்பன் சென்று பார்வையிட்டார். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி தலா ரூ. 5 ஆயிரம் வீதம் 7 பேருக்கு ரூ. 35 ஆயிரம் வழங்கப்பட்டது. இதில், காரைக்குடி வட்டாட்சியர் கண்ணன், காரைக்குடி நகராட்சி ஆணையர் பெ. விஜயலெட்சுமி மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தனர்.
    இச்சம்பவம் குறித்து, காரைக்குடி தெற்கு காவல்நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai