Enable Javscript for better performance
திருக்கோஷ்டியூரில் ஸ்ரீராமானுஜரின் 1000-ஆவது அவதாரப்பெருவிழா- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோஷ்டியூரில் ஸ்ரீராமானுஜரின் 1000-ஆவது அவதாரப்பெருவிழா

    By DIN  |   Published on : 08th October 2016 12:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூரில் ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது அவதாரப் பெருவிழாவை முன்னிட்டு, திருவிளக்குப் பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    ஸ்ரீராமானுஜரின் ஆயிரமாவது திருநட்சத்திர ஆண்டாக இந்தாண்டு அமைந்திருப்பதால், உலக நன்மை வேண்டி திருக்கோஷ்டியூரில் முப்பெரும் விழா நடைபெற்று வருகிறது.
    ஸ்ரீநவநரசிம்ம சுதர்சன விஸ்வசாந்தி மஹாயக்ஞமும், கோடி தீப ஆராதனையும், மற்றும் கோடி ஜப பிரார்த்தனை விழாவும் கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த விழாவானது, அக்டோபர் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
    ஸ்ரீராமானுஜர் நந்தவனத்துக்கு அருகில் நடக்கும் இந்த விழாவில், தினமும் நான்கு வேதங்கள், இதிகாசப் புராணங்கள், விஷ்ணுசகஸ்ர நாம பாராயணம், தமிழ் வேதமாகிய நாலாயிரத் திவ்ய பிரபந்த பாராயணமும், கோ பூஜை, கஜ பூஜை ஆகியனவும் நடைபெற்று வருகின்றன.
    இதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது. இதில், சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, ஸ்ரீநவநரசிம்ம கமிட்டி மற்றும் திருக்கோஷ்டியூர் ஸ்ரீசெளமிய நாராயண எம்பெருமானார் சாரிடபிள் டிரஸ்ட்டும் செய்து வருகின்றன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai