Enable Javscript for better performance
ராஜகம்பீரத்தில் தூய்மை இயக்கப் பணி- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரை மனிதம் அறக்கட்டளையின் குழந்தைகள் வள மையம் சார்பில், ராஜகம்பீரத்தில் தூய்மை இயக்கப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
    மனிதம் அறக்கட்டளை இயக்குநர் பி.எஸ். வனராஜன் தலைமை வகித்தார். தூய்மை இந்தியா இயக்கம் குறித்து, மனிதம் திட்ட மேலாளர் ராஜேஷ், குழந்தைகள் சுகாதாரம் குறித்து ஒருங்கிணைப்பாளர் ரசீந்திரக்குமார் ஆகியோர் பேசினர். ராஜகம்பீரத்தில் மகளிர் மன்றக் கட்டட வளாகம், அங்கன்வாடி மையம், மேல்நிலை குடிநீர்த் தொட்டி, தெற்குத்தெரு ஆகிய பகுதிகளில், மனிதம் குழந்தைகள் வள மையத்தில் பயிலும் குழந்தைகள் மற்றும் கிராம மக்கள் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர். இதற்கான ஏற்பாடுகளை, குழந்தைகள் வள மைய பொறுப்பாளர்கள் புவனேஸ்வரி, கௌசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai