Enable Javscript for better performance
அப்துல்கலாம் பிறந்த நாள்: இளைஞர்கள் எழுச்சிப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்ட கல்வித்துறை சார்பில் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி இளைஞர்கள் எழுச்சிப்பேரணி சிவகங்கை யில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற இப்பேரணியை சிவகங்கை அரண்மனை வாசலில் மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி கொடியசைத்து தொடக்கி வைத்துப் பேசுகையில், டாக்டர் அப்துல்கலாம் கூறியபடி உயர்வான லட்சியத்தை மாணவர்கள் கனவு கண்டு அதை நினைவாக்குவதற்கு முயற்சிக்க வேண்டும். வாய்ப்பிற்காக காத்திருக்காமல் நீங்களே வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செந்திவேல்முருகன், சிவகங்கை வட்டாட்சியர் நாகநாதன், பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai