Enable Javscript for better performance
காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடி முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக பூஜைகள் தொடக்கம்

    By DIN  |   Published on : 15th October 2016 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி மீனாட்சிபுரம் அருள்மிகு முத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி யாகசாலை பூஜைகள் வெள்ளிக்கிழமை தொடங்கின.
      இக்கோயிலில் அக்டோபர் 19-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கோயில் பிரகார மண்டபத்தில் வெள்ளிக்கிழமை காலை அனுக்ஞை, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, ஸ்ரீ தன பூஜை, ஸ்ரீ கணபதி ஹோமம் நடைபெற்றது. மாலையில் ஊஞ்சலில் அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். தொடர்ந்து நவசக்தி அர்ச்சனையும், தீபாராதனைகளும் நடைபெற்றன.
      முதல் நாள் பூஜையில் பாஜக தேசியச் செயலர் ஹெச். ராஜா, ஸ்ரீ லலிதா முத்துமாரியம்மன் அறக்கட்டளைத் தலைவர் எம். அருணாசலம், செயலர் வீ. அய்யப்பன், பொருளாளர் பி. ராமசுப்பிரமணியன், கோயில் செயல் அலுவலர் ஏ.கே. அகிலாண்டேஸ்வரர் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai