Enable Javscript for better performance
சிங்கம்புணரி வட்டாரத்தில் வாடும் பயிர்கள்: நுண்ணுயிர் திரவம் தெளிக்க யோசனை- Dinamani

சுடச்சுட

    

    சிங்கம்புணரி வட்டாரத்தில் வாடும் பயிர்கள்: நுண்ணுயிர் திரவம் தெளிக்க யோசனை

    By DIN  |   Published on : 15th October 2016 01:19 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    agriculture

     

    சிங்கம்புணரி வட்டாரத்தில் வறட்சியால் வாடும் பயிர்களுக்கு நுண்ணுயிர் திரவம் தெளிக்க வேளாண் துறை பரிந்துரை செய்துள்ளது.

      சிங்கம்புணரி வட்டாரத்தில் விவசாயிகள் சாகுபடி செய்துள்ள நெல், பயிறு வகைப் பயிர்களில் பூ மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் மெத்தைலோ பாக்டீரியா திரவ நுண்ணுயிர் உரத்தை தண்ணீரில் கலந்து தெளிக்க தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் பரிந்துரை செய்துள்ளது. 100 மில்லி முதல் 200 மில்லி அளவிலான மெத்தைலோ பாக்டீரியா நுண்ணுயிர் உரத்தை 10 லிட்டர் நீரில் கலந்து இலையில் நன்கு நனையும்படி காலை அல்லது மாலை நேரங்களில் தெளிக்க வேண்டும்.

    இது வறண்ட காலத்தில் பயிர் வளர்ச்சி ஊக்கியாக செயல்படும். மேலும் 10 சதவிகிதம் மகசூல் அதிகரிப்பதுடன் வறட்சி தாங்கும் திறனை பயிர்களுக்கு அளிக்கிறது. இது குறித்து தகவல் வேண்டுவோர் சிங்கம்புணரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கார்த்திகேயனை அணுகலாம் என வேளாண்துறை தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai