Enable Javscript for better performance
தாயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், கட்டட வசதி பற்றாக்குறை- Dinamani

சுடச்சுட

    

    தாயமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள், கட்டட வசதி பற்றாக்குறை

    By DIN  |   Published on : 15th October 2016 05:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இளையான்குடி ஒன்றியம் தாயமங்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதுமான மருத்துவர்கள், கட்டட வசதி இல்லை என புகார் எழுந்தள்ளது. தாயமங்கலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறந்து வைக்கப்பட்டது. 50 க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிகிச்சை பெற வருகின்றனர். ஆனால் இவர்களுக்கு சிகிச்சையளிக்க போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள் இல்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
      இது குறித்து திமுக ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன் கூறும்போது, இங்கு இரண்டு மருத்துவர்கள் பணியிடத்துக்கு அனுமதி உள்ளது. ஆனால் ஒரு மருத்துவர் மட்டுமே பணியில் உள்ளார். பெண் மருத்துவர் இல்லை. 4 செவிலியர்கள் பணியிடத்தில் இருவர் மட்டுமே உள்ளனர். லேப் டெக்னீஷியன் பணியிடம் காலியாக உள்ளது. நிரந்தர ஆம்புலன்ஸ் வசதியும் இல்லை. ஏராளமான கர்ப்பிணிப் பெண்கள் இங்கு பிரசவத்துக்கு வருகின்றனர். ஆனால் இவர்களுக்குத் தேவையான கட்டட வசதி இல்லை. இது குறித்து சம்மந்தப்பட்ட துறை நிர்வாகத்துக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது என்றார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai