Enable Javscript for better performance
திருப்பத்தூரில் குடிநீர் குழாய்களை சீரமைக்கக் கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    திருப்பத்தூரில் குடிநீர் குழாய்களை சீரமைக்கக் கோரிக்கை

    By DIN  |   Published on : 15th October 2016 05:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பத்தூரில் குடிநீர் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
    திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் தினமும் 1 மணி நேரம் வழங்கப்பட்டு வருகிறது.
    இக்குடிநீர் செல்லும் குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. மருதுபாண்டியர் நகர், அச்சுக்கட்டு பகுதி ஆகிய இடங்களில் அடிக்கடி உடைப்புகள் ஏற்படுகின்றன. வெள்ளிக்கிழமை புதுத்தெரு பகுதியில் மதுரை சாலை பாலத்தில் கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 10  அடி தூரம் தண்ணீர் வீணாகச் சென்று சாக்கடையில் கலந்தது. அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில் தண்ணீர் வீணாவதைத் தடுக்க இக்குழாய்களை விரைவாக சீரமைக்கவேண்டும். என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai