Enable Javscript for better performance
தீபாவளிக்கு காரைக்குடி மண்டலம் சார்பில் 110 சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு- Dinamani

சுடச்சுட

    

    தீபாவளிக்கு காரைக்குடி மண்டலம் சார்பில் 110 சிறப்புப் பேருந்துகள் இயக்க முடிவு

    By DIN  |   Published on : 15th October 2016 05:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக காரைக்குடி மண்டலம் சார்பில் சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக பொதுமேலாளர் ஏ. தர்மராஜ் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தீபாவளிப் பண்டிகைக்காக அக்டோபர் 26 முதல் 28 வரை சென்னையில் இருந்து சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு 110 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
    சென்னையில் நெரிசலைத் தவிர்க்க 4 இடங்களில் தாற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூர், திருச்சி, காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், எர்ணாகுளம் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் புறப்படும்.
    திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பகுதிகளுக்கு தாம்பரம் சானடோரியம் அண்ணா பேருந்துநிலையமும், புதுச்சேரி, கடலூ ருக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தின் எதிரே மாநில தேர்தல் ஆணையம் பகுதியும் தாற்காலிக பேருந்து நிலையமும், வேலூர், தர்மபுரி, ஓசூர் பேருந்துகளுக்கு பூவிருந்தமல்லி பேருந்து நிலையமும் செயல்படும்.
    அக். 26, 27, 28 தேதிகளில் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் வகையில் ஏற்கெனவே முன்பதிவு செய்துள்ள பயணிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பேருந்து நிலையங்களுக்குச் சென்று தாங்கள் ஏற்கெனவே முன்பதிவு செய்த நேரத்தில் அந்தந்தப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai