Enable Javscript for better performance
மதுக்கடையை அகற்றக்கோரி கையெழுத்து இயக்கம்- Dinamani

சுடச்சுட

    

    மானாமதுரை பழைய பேருந்து நிலையம் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
    மானாமதுரை பழைய பேருந்து நிலையப் பகுதியில் ஏராளமான வியாபார நிறுவனங்கள் உள்ளன. ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். வியாபார நிறுவனங்களுக்கு மத்தியில் மதுக்கடை அமைந்துள்ளது. விழாக்காலங்கள், முகூர்த்த நாள்களில் இந்த கடையில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடித்தபின் மோதல் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இதனால் இங்குள்ள நிறுவனங்களின் விற்பனை பாதிக்கப்படுகிறது. இந்த மதுக்கடையை அகற்ற பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பி வைக்க கட்சியின் ஒன்றியக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக ஒன்றியச் செயலாளர் முனியராஜ் கூறினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai