Enable Javscript for better performance
மாநில யோகா போட்டியில் மானாமதுரை மாணவிகள் சாதனை- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவில் நடந்த யோகாசன போட்டியில் மானாமதுரை பாபா மெட்ரிக் பள்ளி மாணவிகள் சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றனர்.
    மாநில யோகா விளையாட்டுப் போட்டி மதுரை மன்னர் கல்லூரியில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து 106 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
     மானாமதுரை பாபா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 7 மற்றும் 8 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவிகள் கே.ஸ்வேதா, ஜி.உஷாராணி, பி.நவீனா, பி.கோடீஸ்வரி ஆகியோர் பங்கேற்று யோகாசனங்களை செய்து காட்டி சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றனர்.
     வெற்றி பெற்ற இம் மாணவிகளுக்கு சுழற்கோப்பைகள் பரிசுகள் வழங்கப்பட்டது.
     போட்டியில் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்த இம் மாணவிகளை பாபா மெட்ரிகுலேஷன் பள்ளி நிறுவனர் ராஜேஸ்வரி, தாளாளர் கே.பிஆர்.கபிலன், ஒருங்கிணைப்பாளர் ஆர்.மீனாட்சி, முதல்வர் எஸ்.நவநீதகிருஷ்ணன், யோகா ஆசிரியர் அழகுமுருகன் மற்றும் ஆசிரியர்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai