சிவகங்கை மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காற்றுடன் பெய்த கன மழையால் அச்சங்குளத்தில் உள்ள மின்கம்பம் மற்றும் குடியிருப்புப் பகுதியில் இருந்த மரங்கள் விழுந்து வீடுகள் சேதமடைந்தன.
சிவகங்கை மாவட்டம், முழுவதும் செவ்வாய்க்கிழமை இரவு சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதில் அச்சங்குளம் காலனி குடியிருப்பு பகுதியில் இருந்த மரங்கள் விழுந்து 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. மேலும், சோலைச்சியம்மன் கோயில் முன்பு உள்ள இரண்டு மின்கம்பங்கள் உள்பட 5 மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் மின்தடை ஏற்பட்டு கிராமமே இருளில் மூழ்கியது.
ஆலங்குளம்,ஊத்திகுளம் ஆகிய கிராமங்களில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்து பல வீடுகள் சேதமடைந்தன. மேலும் மின்கம்பங்கள் பழுதானதால் மின் தடையும் ஏற்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகள் குறித்து வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் 6-ஆம் தேதி காலை வரை பெய்த மழையளவு விவரம்:
சிவகங்கை- 18 மி.மீ, இளையான்குடி- 5 மி.மீ, திருப்புவனம்-16.40 மி.மீ, திருப்பத்தூர்-49மி.மீ,தேவகோட்டை-18.10மி.மீ,காரைக்குடி-15.2மி.மீ மொத்தம் 121.70 மி.மீ.
7-ஆம் தேதி காலை வரை பெய்த மழையளவு விவரம்: சிவகங்கை-36 மி.மீ, மானாமதுரை-4.80 மி.மீ,திருப்புவனம்-10.20மி.மீ,திருப்பத்தூர்-10மி.மீ, காரைக்குடி-2.40மி.மீ,மொத்தம் 63.4 மி.மீ மழை பெய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.