சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே நவத்தாவு கிராமத்தில் புரவி எடுப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த கிராமத்திலுள்ள அய்யனார் கோயிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வைகாசி மாதத்தில் விவசாயம் செழிக்க வேண்டி புரவி எடுப்பு விழா நடைபெறும்.
அதன்படி, இந்தாண்டு விழாவுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு நவத்தாவு அய்யனார் கோயிலில் காப்புக் கட்டப்பட்டது. இதையடுத்து கிராம மக்களும் விரதம் தொடங்கினர்.
தாயமங்கலம் செல்லும் ரோட்டில் உள்ள சுப்ரமணியர் கோயிலில் புரவிகள், பொம்மைகள், சுவாமி சிலைகள் மண்ணால் உருவாக்கப்பட்டு அதற்கு வர்ணம் பூசப்பட்டது. தொடர்ந்து நவத்தாவு கிராம மக்கள் புரவிகளை சுமந்து செல்ல மானாமதுரை வந்தனர்.
புரவிகளை வடிவமைத்த குலாலர் சமுதாயத்தினர் அதற்கு சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் கிராம மக்கள் புரவிகளையும், பொம்மைகளையும் சுமந்து நவத்தாவு கிராமத்துக்கு ஊர்வலமாகச் சென்று அங்குள்ள அய்யனார் கோயிலுக்கு கொண்டு சென்றனர். அங்கு புரவிகளுக்கு பூஜைகள் நடத்தப்பட்டன. விழாவில் கிராம மக்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.