காரைக்குடியில் புகார் தொடர்பாக விசாரிக்க சென்ற தலைமைக் காவலரைத் தாக்கியதாக ஒருவர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
காரைக்குடி வடக்கு காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் மாயவதாரன் (40). இவர் ஒரு புகார் தொடர்பாக ரயில்வே குட்ஷெட் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரை விசாரணைக்கு அழைப்பதற்காக செவ்வாய்க்கிழமை சம்மன் கொடுக்க சென்றாராம்.
அப்போது தலைமைக் காவலர் மாயவதாரனை சுப்பிரமணியன் ஆபசமாகப் பேசி, பணியை செய்யவிடாமல் தடுத்து தாக்கினாராம். இதுகுறித்து மாயவதாரன் அழகப்பாபுரம் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் சார்பு ஆய்வாளர் கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.