சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துக் கிராமங்களிலும் தலா ரூ.6.20 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் பொட்டப்பாளையம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் தலைமை வகித்து அவர் பேசியது: பருவநிலை மாற்றத்தின் காரணமாக பொதுமக்களுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.
இதனைக் கவனத்தில் கொண்டு வீட்டில் சேமித்து வைக்கும் குடிநீரை சுத்தமாக பாதுகாத்து பருக வேண்டும். மேலும்,தேங்காய் சிரட்டை,டயர், உரல், வீடுகள் அருகே உள்ள சிறு,சிறு பள்ளங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அந்த நீரிலிருந்து தான் நோயினை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாகின்றன. அதனை முறைப்படுத்தினால் நோய் தாக்குதலிருந்து தப்ப முடியும். கிராமங்களில் வாடகை கட்டடத்தில் இயங்கி வரும் நியாய விலை கடைகளுக்கு சொந்த கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவைதவிர சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கிராம மக்கள் பயன்பெறும் வகையில் அந்தந்த கிராமத்தில் ரூ.6.20 லட்சம் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார்.
வருவாய்த் துறை, விவசாயத் துறை, புதுவாழ்வு திட்டம் ஆகிவற்றின் மூலம் பயனாளிகளுக்க நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.
சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுந்தரமுர்த்தி,துணை ஆட்சியர் சுப்பையா(ஆயத்தீர்வு மற்றும் கலால்),திருப்புவனம் வட்டாட்சியர் கமலாதேவி, அரசு அலுவலர்கள் மற்றும் வருவாய்த்துறைப் பணியாளர்கள்,பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.