காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரியில் பயிலும் இளங் கலை இரண்டு,மூன்றாமாண்டு, முதுகலை இரண்டாமாண்டு மற்றும் எம்ஃபில் மாணவ, மாணவியர்களுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 16) முதல் வகுப்புகள் தொடங்குகிறது.
கோடை விடுமுறைக்குப்பிறகு 2017-2018 கல்வியாண்டிற்கு அரசு கல்லூரிகள் ஜூன் 16-இல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.சி.ஏ., உள்ளிட்ட
இளங்கலை இரண்டு மற்றும் மூன்றாமாண்டு மாணவ, மாணவியர்களுக்கும், எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்.,
உள்ளிட்ட முதுகலை இரண்டா மாண்டு மாணவ, மாணவியர்களுக்கும் வழக்கம் போல் வகுப்புகள் தொடங்குகிறது.
மேலும் இளங்கலை அனைத்து முதலாண்டு மாணவ, மாணவியர்களுக்கு வரும் ஜூன் 21 -இல் வகுப்புகள் தொடங்கவிருப்பதாக கல்லூரி முதல்வர் கூ. கூடலிங்கம் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.