ஆவணப்பதிவுக்காக படப்பிடிப்பு: தாலாட்டு பாடல் பாடுவோருக்கு கோவிலூர் மடாலயம் அழைப்பு

கோவிலூர் மடாலயத்தில் தாலாட்டுப் பாடல்களை ஆவணப்படுத்தும் படப்பிடிப்பில் தாலாட்டுப் பாடல்கள் பாடுபவர்கள் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

கோவிலூர் மடாலயத்தில் தாலாட்டுப் பாடல்களை ஆவணப்படுத்தும் படப்பிடிப்பில் தாலாட்டுப் பாடல்கள் பாடுபவர்கள் பங்கேற்கலாம் என்று அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவிலூர் மடாலயத்தின் சார்பில் புதன் கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோவிலூர் மடாலயம் செட்டிநாடு தொடர்பான பண்பாடு, கலாசாரம் மற்றும் பழக்க வழக்கங்களை ஆவணப்படுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக செட்டிநாட்டுப் பகுதியில் உள்ள தாலாட்டுப் பாடல்களை பதிவு செய்வதற்கான படப்படிப்பு 17.6.2017 சனிக்கிழமை காலை 10 மணிக்கு கோவிலூர் மடாலய வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இப்படப்பிடிப்பில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் சனிக்கிழமை காலை 9.15 மணிக்கு வருகை தரவேண்டும். மேலும் விவரங்களுக்கு கோவிலூர் மடாலயத்தை 04565-236846, 238783 என்ற எண்களிலோ, 9884180732 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com