மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

தமிழக முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பயனாளிகள் ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Published on
Updated on
1 min read

தமிழக முதல்வரின் மாநில இளைஞர் விருது பெற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பயனாளிகள் ஜூன் 16-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
  சிவகங்கை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வெ.ச.ராமசுப்பிரமணியன் இது குறித்து வெளியிட்ட செய்தி விவரம்: ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று தமிழக முதல்வரின் மாநில இளைஞர் விருதுகள் வழங்கப்படுகின்றன. 15 வயது முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.  இந்த விருது ரூ.50ஆயிரம் ரொக்கம், பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியதாகும்.   2017-ஆம் ஆண்டிற்கான மாநில இளைஞர் விருது பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள்    ‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்திலிருந்து விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய சான்றிதழ்களுடன் ஜூன் 16-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் சிவகங்கை மானாமதுரை சாலையில் உள்ள மாவட்ட விளையாட்டு (ம) இளைஞர் நலன் அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703503 என்ற செல்லிடப் பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com