கார்கள் மோதி விபத்து:  மேலும் ஒரு பெண் சாவு

காரைக்குடி அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
Published on
Updated on
1 min read

காரைக்குடி அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை 2 கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் புதுச்சேரியைச் சேர்ந்த பெண் புதன்கிழமை உயிரிழந்தார்.
 காரைக்குடி சூடாமணிபுரம் நேதாஜி நகரைச் சேர்ந்த அன்னபூரணி குடும்பத்தினர் சென்ற காரும் புதுச்சேரி உருளையான் பேட்டையைச் சேர்ந்த மனோகரன் குடும்பத்தினர் சென்ற காரும் காரைக்குடி அருகே கோவிலூர்-மானகிரி பகுதியில் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாயின.
 இதில், காரைக்குடியைச் சேர்ந்த அன்னபூரணி, அவரது மகன் முத்து மாணிக்கம், 2 வயது குழந்தை ரோகிணி, புதுச்சேரியைச் சேர்ந்த மனோகரன், மகாலெட்சுமி ஆகிய 5 பேர் உயிரிழந்தனர்.
 இதில், காயமடைந்து சிகிச்சைபெற்று வந்தவர்களில் புதுச்சேரியைச் சேர்ந்த குட்லாயி (58), புதுச்சேரிக்கு சிகிச்சைக்காக புதன்கிழமை அழைத்துச்செல்லும் வழியில் உயிரிழந்தார்.
 இதனால் இவ்விபத்தில் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்தது. குன்றக்குடி காவல்நிலைய போலீஸார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com