சிவகங்கை மாவட்டத்தில் பணியாற்றிய 5 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சு.மலர்விழி உத்தரவிட்டார்.
இது குறித்து அவர் பிறப்பித்துள்ள உத்தரவு விவரம்:சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியராகப் பணியாற்றிய கந்தசாமி, அண்மையில் புதிதாக தொடங்கப்பட்ட சிங்கம்புணரி தாலுகாவிற்கு வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக பணியாற்றிய சுமதி(எ) சுதந்திரா திருப்பத்தூர் வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று, காரைக்குடி சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியராக பணியாற்றிய மூர்த்தி, சிங்கம்புணரி தாலுகாவின் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மண்டல துணை வட்டாட்சியராக பணியாற்றிய ராஜா, பதவி உயர்வு பெற்று சிவகங்கை மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகத்தில் நேர்முக உதவியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், மானாமதுரை வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவு தனித் துணை வட்டாட்சியராக பணியாற்றிய தமிழரசன்,பதவி உயர்வு பெற்று காரைக்குடி சமூக பாதுகாப்பு திட்டத்தின் தனி வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.