தொழில் தொடங்குவதற்கு குறைந்த வட்டியில் கடனுதவி பெற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கலாவதி வெளியிட்ட செய்தி: விவரம்:
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதாரக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர் தொழில் தொடங்குவதற்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தனிநபர் கடன், சிறுவணிகக் கடன் மற்றும் கல்விக் கடன், மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. கடனுதவி பெற ஆண்டு வருமான வரம்பு கிராமப் புறமாக இருப்பின் ரூ.81ஆயிரம், நகர்ப்புறமாயின் ரூ.1லட்சத்து 3ஆயிரத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
மேற்கண்ட தகுதிகளுடன் கடனுதவி பெற விரும்பும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிறுபான்மையினர் பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், தொழில் தொடங்குவதற்கான திட்ட அறிக்கை, ஆதார் அடடை நகல் ஆகியவற்றுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம்.
மேலும்,இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட கூட்டுறவு வங்கிகள் மற்றும் அந்தந்த பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நேரடியாக தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.