ஆசிரியர் தின கட்டுரை போட்டியில் பங்கேற்கலாம்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட அளவில் ஆசிரியர் தின கட்டுரைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
Published on
Updated on
1 min read

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் சிவகங்கை மாவட்ட அளவில் ஆசிரியர் தின கட்டுரைப்போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
   தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் துணை தலைவர் ப.சாஸ்தா சுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு விவரம்:  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் சிவகங்கை மாவட்ட அளவில் நடைபெற உள்ள கட்டுரை போட்டிக்கு பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், ஆசிரியர்கள்,சமூக ஆர்வலர்கள் மற்றும் பங்கேற்க விருப்பமுள்ள பொதுமக்கள் தங்களது கட்டுரைகளை வரும் செப்.10ஆம் தேதிக்குள் அனுப்பலாம்.
பள்ளி,கல்லூரி மாணவ, மாணவிகள் கனவு ஆசிரியர் எனும் தலைப்பிலும்,ஆசிரிய,ஆசிரியைகள் என்னை செதுக்கிய புத்தகம் எனும் தலைப்பிலும்,ஆர்வலர்கள்,பொதுமக்கள் எங்க ஊரு எங்க பள்ளி எனும் தலைப்பிலும் கட்டுரைகளை ஏ 4 தாளில் 3 பக்கங்களுக்கு மிகாமல் எழுதி புலவர் கா.காளிராசா,ஆசிரியர் தின மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,307- தமிழ்க் குடில், அழகாபுரி அஞ்சல்,கொல்லங்குடி-630556 என்ற முகவரிக்கு வரும் செப்.10ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.  
ஒருவர் ஒரு படைப்பினை மட்டுமே அனுப்ப வேண்டும். படைப்புகள் புதியதாகவும்,கட்டுரையாளரின் சொந்த படைப்பாகவும் இருத்தல் வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும், அனுப்பப்படும் சிறந்த படைப்புகள் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மூலம் வெளிவரும் விஞ்ஞானச் சிறகு,துளிர்,புதுவிழுது உள்ளிட்ட இதழ்களில் பிரசுரிக்கப்படும்.
மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு 9942190845, 9894523840  என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com