சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நதிகளை இணைப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பத்தூர் - சிங்கம்புணரி சாலையில் உள்ள குளோபல் இன்டர்நேஷனல் பள்ளியின் மாணவர்கள் பங்கேற்ற இப்பேரணிக்கு பள்ளியின் தாளாளர் பேராசிரியர் காந்தி தலைமை வகித்தார்.
திருப்பத்தூர் நகர் காவல் சார்பு- ஆய்வாளர் ஜானகிராமன் கொடி அசைத்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். நதிநீரை இணைப்போம், விவசாயத்தை வளர்ப்போம், நதிநீர் சாலைகள் ஏற்படுத்துவோம் என்ற பதாகைகளை கைகளில் ஏந்தி மாணவர்கள் அண்ணாசிலையிலிருந்து மதுரை சாலை, பெரியகடைவீதி, சின்ன கடை வீதி வழியாக பேருந்து நிலையம் ,தேரோடும் வடக்கு வீதி பகுதிகள் வரை சென்றனர்.
அங்கு காந்திசிலை முன்பு, இந்த தேசத்தின் வளர்ச்சிக்காக என்றென்றும் அர்ப்பணிப்போடு பாடுபடுவோம் என்று உறுதிமொழி எடுத்தனர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளியின் இயக்குனர்கள்
ராஜமூர்த்தி, பிரசன்னா, உமாமகேஸ்வரி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.