சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகேயுள்ள மாங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் புதன்கிழமையன்று முப்பெரும் விழா நடைபெற்றது.
திருப்பத்தூர் ஓன்றியம் மாங்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் தலைமையாசிரியை நல்லாசிரியர் விருது பெற்றமைக்கான பாராட்டு விழா, ஆசிரியர் தின விழா, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவினை ஊர்பொதுமக்கள், திருப்பத்தூர் அரிமாசங்கம் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இணைந்து நடத்தினர். இவ்விழாவிற்கு உதவி தொடக்ககல்வி அலுவலர் ஜான்சார்லஸ் தலைமை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் சிவசுப்பிரமணியன், பேராசிரியர் சுப்பிரமணியன், பாண்டியன், முன்னாள் தொடக்க கல்வி அலுவலர் ரெங்கசாமி, மாநில வர்த்தக துணைச் செயலாளர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல் நிகழ்வாக ஆசிரியர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டு ஆசிரியர் தின வாழ்த்துரை வழங்கப்பட்டது. தொடர்ந்து தலைமையாசிரியை மார்கிரெட்சாந்தகுமாரி தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றமைக்கு ஊர்பொதுமக்கள், திருப்பத்தூர் அரிமாசங்க நிர்வாகிகள்,முன்னாள் மாணவர்கள், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
பின்னர் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு கதை,கட்டுரை, பேச்சு,ஓவியம் உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விழாவில் திரைப்பட இயக்குநர் ராஜ்குமார், கிறிஸ்துராஜா பள்ளி நிறுவனர் விக்டர், முன்னாள் மாணவர்கள், திருப்பத்தூர் அரிமாசங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.