Enable Javscript for better performance
காரைக்குடியில் ஹிந்தி தேர்வுகள்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடியில் ஹிந்தி தேர்வுகள்

    By DIN  |   Published on : 12th February 2017 06:00 AM  |   அ+அ அ-   |    |  

    காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் சர்வதேசப் பள்ளியில் மூன்றாவது முறையாக ஹிந்தி தேர்வுகள் சனிக்கிழமை நடைபெற்றது.
    தட்சிணா பாரத ஹிந்தி பிரசார சபா சார்பில் நடத்தப்படும் பிரவேஷிகா 1 மற்றும் 2, பிரவீன் பூர்வார்த் 1 மற்றும் 2, பிரவீன் உத்ரார்த் 1 மற்றும் 2, விஷாரத் பூர்வார்த் 1 மற்றும் 2, விஷாரத் உத்ரார்த் 1 மற்றும் 2 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட் டன. இதில் 596 பேர் பங்கேற்றனர்.
    இத்தேர்வுக்கான ஏற்பாடுகளை பள்ளித் தாளாளர் செ.சத்தியன் தலைமையிலான ஆசிரியர்கள், பள்ளியின் துணை முதல்வர் அருள்பிரபாகர் ஆகியோர் செய்திருந்தனர்.
    மேலும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 12) பிரவேஷிகா-3, பிரவீன் பூர்வார்த்-3, பிரவீன் உத்ரார்த்-3, விஷாரத் பூர்வார்த்-3 மற்றும் விஷாரத் உத்ரார்த்-3 ஆகிய தேர்வுகள் நடை பெற உள்ளன. இத்தேர்வுகளில் 512 பேர் பங்கேற்க உள்ளதாக தேர்வு அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai