சுடச்சுட

    

    மதகுபட்டி அருகே கிராம நிர்வாக அலுவலரைத் தாக்கியதாக 3 பேர் மீது மதகுபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
    சிவகங்கை மாவட்டம் கீழக்கோட்டை குரூப் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வருபவர் மூர்த்தி. இவர், தனது அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை பணியாற்றிக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த சங்கரன்(55) என்பவர் மூர்த்தியிடம் மணல் திருட்டு குறித்து தகராறு செய்தாராம். தொடர்ந்து அவரது மகன்கள் பாண்டிகண்ணன்(34), முருகன்(27) ஆகிய இருவரும் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வந்து மூர்த்தியைத் தாக்கினராம். இதில் பலத்த காயமடைந்த அவர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவர் கொடுத்தப் புகாரின் பேரில், மதகுபட்டி போலீஸார் பாண்டி கண்ணன்,முருகன்,சங்கரன் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai