இளையான்குடியில் குறுகியகால நெல் விதைகளை  இருப்பு வைக்க திமுக கோரிக்கை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் குறுகியகால நெல் விதைகளை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்க வேண்டும்
Published on
Updated on
1 min read

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியத்தில் குறுகியகால நெல் விதைகளை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு வைக்க வேண்டும் என மேற்கு ஒன்றியம் மற்றும் பேரூர் திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
 இளையான்குடியில் திங்கள்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் ஒன்றிய அவைத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். பேரூர்ச் செயலர் நஜூமுதீன் முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலர் சுப.மதியரசன் சிறப்புரையாற்றினார். இதில் இளையான்குடி ஒன்றியம் முழுவதும் வாக்குச்சாவடி குழுக் கூட்டத்தை விரைவில் நடத்துவது எனவும், இளையான்குடி ஒன்றியத்தில் நெல் விதைப்பு பணிகள் தொடங்கியுள்ளதால் இப்பகுதியில் உள்ள வேளாண் விரிவாக்க மையம் உள்ளிட்ட நெல் விதை விற்பனை நிலையங்களில் குறுகியகால நெல் விதைகளை இருப்பு வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 கூட்டத்தில் திமுக அதன் சார்பு அமைப்பு நிர்வாகிகள் முருகானந்தம், புலிக்குட்டி, சந்திரசேகர், ராஜபாண்டி, மலைமேகு, பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.