சிவகங்கை கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவிகளுக்கு இடையே வட்டார அளவிலான விளையாட்டுப் போட்டிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
சிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற்ற இப்போட்டியை, உடற்கல்வி ஆசிரியர் பாக்கியநாதன் தொடக்கி வைத்தார். இதில், கூடைப்பந்து போட்டியில் 5 அணிகளும், எறிபந்து போட்டியில் 21 அணிகளும், கைப்பந்து போட்டியில் 10 அணிகளும் மோதின.
போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டன. போட்டிக்கான ஏற்பாடுகளை, கீழப்பூங்குடி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் முனியாண்டி, உடற்கல்வி ஆசிரியர்கள் ராமலிங்கம், சங்கீதா ஆகியோர் செய்திருந்தனர்.