சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார அளவிலான பள்ளி மாணவர்கள் பங்கேற்ற குறுவட்டப் போட்டி திங்கள்கிழமை தொடங்கியது.
இப்போட்டிகள் தென்கரை மௌன்ட்சீயோன் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்றது. தொடக்க நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் ஜெய்சன் ஜெயபரதன் தலைமை வகித்தார். பிளாரன்ஸ்ஜெயபரதன் மற்றும் விவியன்ஜெய்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 14, 17, 19 வயது பிரிவுகளுக்கான கையுந்து பந்து மற்றும் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. 19 வயதிற்குள்பட்ட கையுந்து பந்து போட்டி பிரிவில் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தையும், கீழச்சிவல்பட்டி எஸ்.எம்.எஸ்.மேல்நிலைப்பள்ளி 2 ஆம் இடத்தையும், பிடித்தன. 17 வயதிற்குள்பட்ட பிரிவில் பட்டமங்கலம் முதலிடத்தையும், நாச்சியார்புரம் பள்ளி 2 ஆம் இடத்தையும் பிடித்தன.
14 வயதிற்குள்பட்ட பிரிவில் நாச்சியாபுரம் பள்ளி முதலிடத்தைப் பிடித்தது. பள்ளி முதல்வர் ஜோசப் வரவேற்றார். விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர் முருகப்பராஜ், உடற்கல்வி ஆசிரியர்கள் முருகேசன், சரவணன், சிவக்குமார், சூரி, உள்ளிட்டோர் செய்திருந்தனர்.