மானாமதுரை பகுதியில் வியாழக்கிழமை (ஆக.16) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்: மானாமதுரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் ஆக.16 இல் நடைபெற உள்ளது. இதனால், மானாமதுரை, சிப்காட்,ராஜகம்பீரம்,முத்தனேந்தல்,இடைக்காட்டூர், மிளகனூர், கட்டிக்குளம், குறிச்சி, தெ.புதுக்கோட்டை, முனைவென்றி, கச்சாத்தநல்லூர், நல்லாண்டிபுரம் ஆகிய பகுதிகளிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.