காரைக்குடியில் ஏப். 22 இல் பாரதிதாசன் தமிழ் விழா

காரைக்குடி பாரதிதாசன் தமிழ்ப் பேரவை சார்பில் 27ஆம் ஆண்டு பாரதிதாசன் தமிழ் விழா வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது.

காரைக்குடி பாரதிதாசன் தமிழ்ப் பேரவை சார்பில் 27ஆம் ஆண்டு பாரதிதாசன் தமிழ் விழா வரும் ஏப்ரல் 22-ஆம் தேதி காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில் நடைபெறுகிறது.
  இவ்விழாவில் பழம்பெரும் தமிழ்ப்புலவர் ஆ. பழநி எழுதிய அனிச்ச அடி' என்ற நாடக நூலை பேராசிரியர் சுப. வீரபாண்டியன் வெளியிட்டு ஆய்வுரையாற்றுகிறார். சிவகங்கை மாவட்ட திமுக துணைச்செயலாளர் சேங்கை மாறன் விழாவில் தலைமை வகித்துப் பேசுகிறார். முதல்நூலை கட்டடக்கலை நிபுணர் சா. நடராசன் பெற்றுக் கொள்கிறார்.
   விழாவில் "போரிடும் உலகை வேரோடு சாய்ப்போம்' என்ற தலைப்பில் கவிஞர் சு. கவிதைப்பித்தன் சிறப்புரை யாற்றுகிறார். நூலாசிரியர் பழநி ஏற்புரையாற்றுகிறார். விழா ஏற்பாடுகளை பாரதிதாசன் தமிழ்ப்பேரவை நிறுவனர் சாமி. திராவிடமணி தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com