Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தில் ரௌடி கைது- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் குண்டர் சட்டத்தின் கீழ் ரௌடி புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
      திருப்பாச்சேத்தியைச் சேர்ந்தவர் பாண்டியழகு (20).  இவர் மீது திருப்புவனம், திருப்பாச்சேத்தி உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
     இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் பாண்டியழகு மானாமதுரை பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி சாலையில் நடந்து சென்றவர்களிடம் பணம் கேட்டதாக மானாமதுரை போலீஸார் அவர் மீது வழக்குப் பதிந்து கைதுசெய்தனர்.
       தற்போது இவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை குண்டர்   சட்டத்தில் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் லதாவுக்கு எஸ்.பி. ஜெயச்சந்திரன் பரிந்துரை செய்தார். இதையடுத்து, ஆட்சியர் உத்தரவின் பேரில் பாண்டியழகுவை மானாமதுரை போலீஸார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai