Enable Javscript for better performance
சிவகங்கையில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
            சிவகங்கை அரண்மனை வாசல் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் தனசேகர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் தாமஸ்ராஜா முன்னிலை வகித்தார்.
          இதில், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தமிழக அரசு  கடந்த 2017-ஆம் ஆண்டிற்கான வருடாந்திர ஊதிய உயர்வு  தொகையை வழங்க வேண்டும். ஈட்டிய விடுப்புக்கான ஊதியத்தை வழங்க வேண்டும், தமிழக மக்களின் வரிப்பணத்தில் செயல்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவைத் திட்டத்தில் தொழிலாளர்களின் சம்பளம்,  வாகன பராமரிப்பு என பல்வேறு வகைகளில் முறைகேடு செய்யும் தனியார் நிறுவனத்தின் மீது நீதி விசாரணை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர்.
    ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தில் இயங்கும் 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில் பணியாற்றும் ஏராளாமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai