Enable Javscript for better performance
சிவகங்கை மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட  குறைதீர் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டத்தில் நாளை பொது விநியோகத் திட்ட  குறைதீர் கூட்டம்

    By DIN  |   Published on : 09th February 2018 02:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் முழுவதும்  சனிக்கிழமை  பொது விநியோகத் திட்ட  குறைதீர் கூட்டம் நடைபெறும் என்று சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க. லதா தெரிவித்துள்ளார். 
      இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் பொது விநியோகத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் நுகர்வோர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணி அளவில்  நடைபெற உள்ளது. அந்தந்த வட்டத்திற்கு உள்பட்ட கிராமங்களில் நடைபெறும் கூட்டத்தில் துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார் பதிவாளர்கள்  உள்ளிட்ட பொது விநியோக திட்ட அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில்  குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம்.அவற்றிற்கு உடனடியாக தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
    முகாம் நடைபெறும் கிராமங்கள்: சிவகங்கை வட்டம் கத்தாலம்பட்டு, மானாமதுரை வட்டம் சங்கமங்கலம்,    இளையான்குடி வட்டம் கரும்புக்கூட்டம், காரைக்குடி வட்டம் மாத்தூர், தேவகோட்டை வட்டம் முப்பையூர்,  திருப்பத்தூர் வட்டம் பிள்ளையார்பட்டி, திருப்புவனம் வட்டம் பொட்டப்பாளையம், காளையார்கோவில்    வட்டம் காளையார்கோவில், சிங்கம்புணரி வட்டம் எம். சூரக்குடி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai