Enable Javscript for better performance
பேருந்தில் திருடிய பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம்,  திருப்பத்தூரில் பேருந்தில் பயணம் செய்த பெண் பயணியிடம்  திருடிய பெண்ணை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
    தஞ்சையிலிருந்து மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்தில் திருமயம் நிறுத்தத்தில் பழனியம்மாள் என்ற பெண் ஏறியுள்ளார். பேருந்து திருப்பத்தூர் வந்ததும் இறங்கிய பழனியம்மாள் தனது பையில் இருந்த பர்ஸை காணாவில்லை என்று கூறியுள்ளார்.
    இதுகுறித்து அருகிலுள்ள காவல் நிலையம் சென்று புகார் தெரிவித்தார். இதையடுத்து,  எஸ்.எஸ்.கோட்டை சோதனச் சாவடிக்கு தகவல் தெரிவித்த போலீஸார், அப்பெண் வந்த பேருந்தை நிறுத்தி அதில் இருந்த பயணிகளிடம் சோதனை மேற்கொண்டனர். 
    இதில் கடலூரைச் சேர்ந்த கவிதாராணி (38) என்பவர் பழனியம்மாளின் பர்ஸை திருடியது தெரியவந்தது. 
    திருப்பத்தூர் நகர் காவல் நிலையம் கொண்டுவரப்பட்ட அப்பெண்ணிடமிருந்த ரூ. 6 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு,  அவர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai