Enable Javscript for better performance
மகளிர் சுயஉதவிக் குழு கடன் தவணை பாக்கி: குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்ததால் பெண் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் சுயஉதவிக் குழு கடன் தவணை பாக்கி: குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்ததால் பெண் தற்கொலை

    By DIN  |   Published on : 09th February 2018 02:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மகளிர் சுயஉதவிக் குழு மூலம்  வாங்கிய கடனுக்கான தவணையை திருப்பி செலுத்த முடியாததால்  குழந்தைகளை வீட்டில் அடைத்து வைத்ததால்,  மனமுடைந்த இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
      மானாமதுரை அருகேயுள்ள கொம்புக்காரனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன் மனைவி தொந்தீஸ்வரி (21). இவர் அந்த கிராமத்தில் செயல்படும்  மகளிர் சுயஉதவிக் குழுவில் கடன் வாங்கியிருந்தாராம். பின்னர் கடனுக்கான தவணையை திருப்பி கட்டாமல் இருந்துள்ளார். இதுகுறித்து அந்த  சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் தொந்தீஸ்வரியின் வீட்டுக்கு அடிக்கடி வந்து பணத்தை  கேட்டுள்ளார்.
       இந்நிலையில்,  கணேசன் வெளியூருக்கு வேலைக்கு சென்றுவிட்டதால், தொந்தீஸ்வரி திருப்புவனத்தை அடுத்த பழையனூர் அருகே கலியனேந்தல் கிராமத்தில்  உள்ள தனது தாய் சுந்தரவள்ளி வீட்டிற்கு தனது மகன் கதிர்வேல் (6),  மகள் பிரியதர்ஷினி(2) இருவரையும் கூட்டிக்கொண்டு சென்று அங்கு தங்கியிருந்தார்.
      கடந்த செவ்வாய்க்கிழமை மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த அந்த பெண்ணும்,  சிலரும் சேர்ந்து கலியனேந்தல் கிராமத்துக்கு வந்து சுந்தரவள்ளியிடம் தொந்தீஸ்வரியின் கடன் தவணை குறித்து பேசியுள்ளனர். வீட்டில் தொந்தீஸ்வரி  இல்லாததால் 
     அவரது தாயார் சுந்தரவள்ளி மற்றும் அவரது மகன் மாயக்கண்ணன்(13) மற்றும் தொந்தீஸ்வரியின்  மகன் கதிர்வேல், மகள் பிரியதர்ஷினி ஆகிய நால்வரையும்  ஒரு ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கொம்புக்காரனேந்தல் கிராமத்துக்கு வந்து தொந்தீஸ்வரியின் வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். இச் சம்பவம் குறித்து அறிந்த  தொந்தீஸ்வரி மனமுடைந்து கலியனேந்தல்கிராமத்தில் தனது தாயார் சுந்தரவள்ளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் தெரிந்தவுடன் கொம்புக்காரனேந்தல் கிராமத்தில் மகளிர் குழுவைச் சேர்ந்தவர்கள் அடைத்து வைத்திருந்த அனைவரையும் விடுவித்துள்ளனர். இதுகுறித்து தொந்தீஸ்வரியின் தாயார் சுந்தரவள்ளி பழையனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai