Enable Javscript for better performance
மானாமதுரையில் பலத்த மழை- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் வியாழக்கிழமை காலை கொட்டித் தீர்த்த மழையால் மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
       மானாமதுரை பகுதியில் குளிர் படிபடியாக விடை கொடுத்துவிட்டு தற்போது அதிகாலைப் பொழுதில் குறைந்த அளவு பனி நிலவுவதும் பின்னர் வெப்பமான வானிலை நிலவுவதுமாக கால நிலை இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக நண்பகல் 11 மணிக்கு மேல் இப்பகுதியில் கடும் வெப்பமான வானிலை நிலவி வருகிறது.
       இந்நிலையில், வியாழக்கிழமை காலை 8 மணிக்கு தூறத் தொடங்கிய மழை வலுவடைந்து பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் காலையில் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் வேலைக்குச் செல்பவர்கள் உள்பட பலரும் அவதிக்குள்ளாகினர். தொடர்ந்து 1 மணி நேரத்துக்கும் மேலாக மழை கொட்டித் தீர்த்தது. அதைத்தொடர்ந்து படிப்படியாக பகல் 11 மணிக்கு மேல் கடும் வெப்பமான வானிலை நிலவியது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai