Enable Javscript for better performance
வேளாண் பொருள்களை இடைத்தரகரின்றி சந்தைப்படுத்த நடவடிக்கை: சிவகங்கை ஆட்சியர்- Dinamani

சுடச்சுட

    

    வேளாண் பொருள்களை இடைத்தரகரின்றி சந்தைப்படுத்த நடவடிக்கை: சிவகங்கை ஆட்சியர்

    By DIN  |   Published on : 09th February 2018 02:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கூட்டுப்பண்ணையம் மூலம் வயல்வெளிகளில் விளையும் பொருட்களை இடைத்தரகரின்றி விவசாயிகள் நேரடியாக சந்தைப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் க.லதா தெரிவித்துள்ளார்.
      சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வேளாண் மற்றும் கால்நடை துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து புதன்கிழமை ஆய்வு செய்த ஆட்சியர்  க.லதா, குளத்துப்பட்டி விவசாயிகளிடம் தெரிவித்தது:
      கடந்த சில ஆண்டுகளாக ஏற்பட்ட கடும் வறட்சியின் காரணமாக வேளாண் பணிகள் பாதிக்கப்பட்டு,விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு குறைந்த அளவு நீரினை பயன்படுத்தி,அதற்கேற்ற தோட்டப்பயிர், சிறுதானியங்கள் உள்ளிட்ட விதை வித்துகளை விதைத்து வேளாண் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இதன் மூலம் கிடைக்கும் வேளாண் பொருட்களை சந்தைப்படுவத்துவதில் மிகவும் சிரமப்படுவதாக வேளாண் துறை சார்ந்து நடைபெறும் கூட்டங்களிலும், கள ஆய்வு மேற்கொள்ளும் போதும் விவசாயிகள் தெரிவித்து வருகின்றனர். இதனைக் கவனத்தில் கொண்டு விவசாயிகள் அதிக லாபம் ஈட்டும் வகையில் சிவகங்கை மாவட்டம் முழுவதும்  கூட்டுப் பண்ணையம் அமைத்து  விவசாயிகள் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைப் பொருட்களை, இடைத்தரகரின்றி அவர்களே நேரடியாக சந்தைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai