சுடச்சுட

  

  ஓவிய ஆசிரியரிடம் ரூ.10 லட்சம் 40 பவுன் நகை மோசடி: இரு பெண்கள் உள்பட 4 பேர் மீது  வழக்கு

  By DIN  |   Published on : 14th June 2018 07:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சிவகங்கையில் ஓவிய ஆசிரியரிடம் ரூ.10 லட்சம், 40 பவுன் நகை மோசடி செய்ததாக இரு பெண்கள் உள்பட நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.     
     சிவகங்கையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (45). இவர், அதே பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ரவிச்சந்திரனிடம் தூவங்காலைச் சேர்ந்த சரவணன், ஆறுமுகம், இந்திரா, அனிதா ஆகிய நான்கு பேரும் கடந்த சில மாதங்களுக்கு முன் இடம், வீடு வாங்கித் தருவதாக கூறி, பல தவணைகளாக ரூ.10 லட்சமும், 40 பவுன் நகையும் பெற்றனராம்.
   ஆனால், கூறியபடி இடமோ அல்லது வீடோ வாங்கித் தராததால் ரவிச்சந்திரன், தான் கொடுத்த பணம் மற்றும் நகையை அவர்களிடம் திருப்பி கேட்டாராம். அதற்கு அவர்கள் முறையாக பதிலளிக்கவில்லையாம். 
   இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரவிச்சந்திரன் இதுகுறித்து சிவகங்கை நகர போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில், சரவணன், ஆறுமுகம், இந்திரா, அனிதா ஆகிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai