Enable Javscript for better performance
கல்லூரியில் பட்டமளிப்பு விழா- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் வெள்ளிக்கிழமை பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
    பட்டமளிப்பு விழாவில், அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுப்பையா, 478 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசுகையில், மாணவர்கள் தங்களது தாய், தந்தையருக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். எதிர்காலத்தை நினைத்துப் பார்த்து, உங்களது எண்ணங்கள், செயல்கள் முன்னேற்றப் பாதையில் செல்லவேண்டும். ஆசிரியர்கள் கடவுளை விட மேலானவர்கள். அவர்கள் கற்பிக்கும் ஒழுக்கத்தின்படி வாழ்க்கை முறைகளை செம்மைப்படுத்திக் கொள்ளவேண்டும் என்றார்.
    தொடர்ந்து, கல்லூரி ஆட்சிக்குழுத் தலைவர் வசந்தராஜன், துணைத் தலைவர் சகுந்தலைராஜன், கல்லூரிச் செயலர் ராமேஸ்வரன், கல்வியியல் கல்லூரிச் செயலர் ஆறுமுகராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இவ்விழாவில், துணை முதல்வர்கள் ரமணி, கோபிநாத் மற்றும் பேராசிரியர் ராஜமாணிக்கம் மற்றும் அனைத்துப் பேராசிரியர்கள் அலுவலர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம் வரவேற்று, அறிக்கை சமர்ப்பித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai