Enable Javscript for better performance
காரைக்குடியில் மார்ச் 27-இல் மின் பயனீட்டாளர்கள்குறை தீர்க்கும் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடியில் மார்ச் 27-இல் மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் கூட்டம்

    By DIN  |   Published on : 24th March 2018 12:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம், மார்ச் 27 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.
    இது குறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வைப் பொறியாளர் மு. சின்னையன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
    காரைக்குடி கோட்டத்துக்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில், காரைக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை இக் கூட்டம் நடைபெறுகிறது.
    இந்தக் கூட்டத்தில், காரைக்குடி கோட்டத்துக்கு உள்பட்ட மின் பயனீட்டாளர்கள் கலந்துகொண்டு, மின் வாரியம் தொடர்பான புகார்களை மனு மூலம் தெரிவிக்கலாம்.
    அவை விசாரணை செய்யப்பட்டு, உடனடியாகத் தீர்வு காணப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai