Enable Javscript for better performance
காரைக்குடி அருகே இளைஞர் சாவில் மர்மம்: நண்பர்கள் 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடி அருகே இளைஞர் சாவில் மர்மம்: நண்பர்கள் 2 பேர் கைது

    By DIN  |   Published on : 24th March 2018 12:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி அருகே கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞரின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, போலீஸார் நண்பர்கள் இருவரை வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
    கண்டனூர்-பாலையூர் பகுதியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் மணிகண்டன் (17). இவரை, இரு தினங்களுக்கு முன் பள்ளத்தூர் போலீஸார் கிணற்றிலிருந்து சடலமாக மீட்டு, காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், மணிகண்டனின் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, பெற்றோரும், உறவினர்களும் சடலத்தை வாங்க மறுத்தனர். காவல் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், வியாழக்கிழமை சடலத்தைப் பெற்றுக்கொண்டனர்.
    இது குறித்து, பள்ளத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். அதில், மணிகண்டன் கிணற்றில் குளிப்பதற்காக நண்பர்களுடன் சென்றதும், விளையாட்டாக குதித்து விளையாடியதில் கல்லில் அடிபட்டு கிணற்றில் மூழ்கி இறந்ததும் தெரியவந்தது.
    இதையடுத்து, அவரது நண்பர்களான நடராஜன் (17), பழனி (19) ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai