Enable Javscript for better performance
காரைக்குடி அருகே மாணவரை தாக்கிய மாணவர் உள்பட 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காரைக்குடி அருகே மாணவரை தாக்கிய மாணவர் உள்பட 3 பேர் கைது

    By DIN  |   Published on : 24th March 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரைக்குடி அருகே பாலிடெக்னிக் மாணவரை தாக்கியதாக, மாணவர் உள்பட 3 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
    காரைக்குடி அருகே லெட்சுமி நகரைச் சேர்ந்தவர் மெல்வின் (17). இவர், கோவிலூரில் உள்ள பாலிடெக்னிக்கில் இரண்டாமாண்டு சிவில் பிரிவு படித்து வருகிறார். இக் கல்லூரியில், இலுப்பக்குடி புதுத் தெருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் முதலாமாண்டு படித்து வருகிறார்.
    இருவருக்குமிடையே பேருந்தில் பயணித்தபோது இருக்கையில் அமர்வது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவர் மெல்வின் வெள்ளிக்கிழமை கல்லூரி செல்வதற்காக கோட்டை முனீஸ்வரன் கோயில் அருகே பேருந்துக்காக காத்திருந்தாராம். அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த சிவக்குமார் மற்றும் சிலர் மெல்வினை கட்டாயப்படுத்தி வாகனத்தில் அழைத்துச் சென்று அருகிலுள்ள கிராமப் பகுதியில் வைத்து தாக்கினராம்.
    இது குறித்து தகவலறிந்ததும், காரைக்குடி அழகப்பாபுரம் காவல் நிலைய சார்பு-ஆய்வாளர் சுகன்யா மற்றும் போலீஸார் விரைந்து சென்று, கடத்திச் சென்ற மெல்வினோடு இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், மாணவர் மெல்வினை கடத்தி தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, மாணவர் சிவக்குமார், பிளஸ் 2 மாணவர் அரியக்குடியைச் சேர்ந்த நந்தகுமார், துணிக் கடை ஊழியர் கார்த்திகேயன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சங்கர் என்பரைத் தேடி வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai