Enable Javscript for better performance
நெற்குப்பையில் ஏலம் ரத்து: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    நெற்குப்பையில் ஏலம் ரத்து: பேரூராட்சி அலுவலகம் முற்றுகை

    By DIN  |   Published on : 24th March 2018 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே நெற்குப்பை பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த ஏலம் ஒத்தி வைக்கப்பட்டதைக் கண்டித்து, அதற்காக பணம் செலுத்தியவர்கள் பேரூராட்சியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    நெற்குப்பை பேரூராட்சியில் வணிக வளாகக் கடைகள் மற்றும் இதர பொருள்கள் ஏலம் விடுவதாக ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில், சுமார் 22 பேர் ஏலம் எடுப்பதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரி பணம் செலுத்தியுள்ளனர்.
    இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் செயல் அலுவலர் நிர்வாகக் காரணங்களை காண்பித்து, ஏலம் மறுதேதியிடாமல் ஒத்தி வைப்பதாக அலுவலகத்தில் உள்ள அறிவிப்புப் பலகையில் நோட்டீஸ் ஒட்டியுள்ளார். இதையடுத்து, ஏலம் ஒத்தி வைக்கப்பட்டதில் உள்நோக்கம் இருப்பதாகக் கூறி, பணம் செலுத்தியவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில், மறு ஏலம் அறிவித்தால் தற்போது பணம் செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
    ஆனால், இந்த கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்படாததால், அலுவலகத்தை விட்டு வெளியே செல்ல மறுத்தனர்.
    உடனே, காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, மறு ஏலம் தேதி குறிப்பிட்டு அறிவிக்கப்படும் என்று கூறியதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai