Enable Javscript for better performance
கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு: வீணாக வெளியேறும் தண்ணீர்- Dinamani

சுடச்சுட

    

    கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு: வீணாக வெளியேறும் தண்ணீர்

    By DIN  |   Published on : 31st March 2018 01:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் கடலாடி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது.
      மானாமதுரை அருகே ராஜகம்பீரத்தில் கடலாடி கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கிருந்து ராட்சத கிணறுகளிலிருந்து உறிஞ்சி எடுக்கப்படும் குடிநீர் குழாய்கள் வழியாக ராமநாதபுரம் மாவட்டம், கடலாடிக்கு கொண்டு சென்று விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் வழிநெடுகிலும் இக் குழாயிலிருந்து பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இணைப்புக் குழாய் மூலம் குடிநீர் பிடித்து வருகின்றனர். இந்நிலையில், மானாமதுரை புறவழிச்சாலை பகுதியில் கடலாடி கூட்டுக் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் திட்டத்திலிருந்து ஏற்றப்படும் தண்ணீர் இந்த உடைப்பு வழியாக வீணாக வெளியேறி வருகிறது. இதனால் கடலாடி பகுதிக்கு தண்ணீர் முழுமையாக செல்லாமல் குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே செல்கிறது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai