Enable Javscript for better performance
சிவகங்கையில் கூட்டுறவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்ட கூட்டுறவுத்துறை அனைத்துப் பணியாளர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
        சிவகங்கை - திருப்பத்தூர் சாலையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின்  இணைப்பதிவாளர்  அலுவலகம் முன்பு  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய  மாவட்டத் தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட கூட்டுறவு அலுவலர்  சங்க மாவட்ட தலைவர் சுரேஷ்குமார்  முன்னிலை வகித்தார்.   இதில், காரைக்குடி சரக துணைப்பதிவாளர் அலுவலகத்தில் தேர்தல் அலுவலர்  கலைச்செல்வன் மீது தாக்குதல் நடத்தியவர்களை  கைது செய்யும் வரை  கூட்டுறவுத் தேர்தலை புறக்கணிப்பது. தேர்தல்அலுவலர்களுக்கு உரிய பாதுகாப்பு உறுதி அளித்த பின்னரே அடுத்த கட்ட தேர்தலை நடத்த வேண்டும். கூட்டுறவுத்  தேர்தல் 2018 சட்டத்திற்குட்பட்டு  எவ்வித நிர்பந்தத்திற்கும்  உட்படுத்தப்படாமல் தேர்தல்  நடத்திட மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  உறுதி அளிக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 
      ஆர்ப்பாட்டத்தில் சிவகங்கை மாவட்ட கூட்டுறவுத் துறையைச் சேர்ந்த ஏராளமான பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai