Enable Javscript for better performance
சிவகங்கை அருகே கிணற்றிலிருந்து பள்ளி மாணவர் சடலம் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை அருகே கிணற்றிலிருந்து பள்ளி மாணவர் சடலம் மீட்பு

    By DIN  |   Published on : 31st March 2018 01:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை அருகே கீழ்பாத்தி கண்மாய் பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார்.
           புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோயிலைச் சேர்ந்த குமார் மகன் மாரிமுத்து(16), இவர், சிவகங்கை அருகே உள்ள சக்கரவர்த்திப்பட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, சிவகங்கையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
          இந்நிலையில், வியாழக்கிழமை மாலை மாரிமுத்து மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து, கீழ்பாத்தி கண்மாய்ப் பகுதியில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, கிணற்றில் குதித்த மாரிமுத்து வெளியே வரவில்லையாம்.   அதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை வரை மாரிமுத்து வீடு திரும்பாததால், அவரது உறவினர்கள் சிவகங்கை நகர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில், காவல் ஆய்வாளர் மோகன் விசாரணை செய்ததில், குளிக்கச் சென்ற இடத்தில் மாரிமுத்து கிணற்றில் மூழ்கியது தெரியவந்துள்ளது. 
         இந்நிலையில், தீயணைப்புத் துறையின் சிவகங்கை நிலைய அலுவலர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான மீட்புப் படையினர், வெள்ளிக்கிழமை கிணற்றுக்குள் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேர தேடலுக்குப் பின்பு, கிணற்றிலிருந்து மாரிமுத்து சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்து சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai