Enable Javscript for better performance
திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் பிரதோஷ விழா- Dinamani

சுடச்சுட

    

    சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூரில் உள்ள சிவாலயங்களில் வியாழக்கிழமை பிரதோஷ விழா நடைபெற்றது.
    திருப்பத்தூர் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் சுவாமி கோயிலில் பிரதோஷ விழாவையொட்டி  மாலை திருத்தளிநாதருக்கும்,  நந்தீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் நந்தீஸ்வரருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு  தீபாராதனை நடைபெற்றது. 
    தொடர்ந்து  மூலவரான திருத்தளிநாதர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து உற்சவ மூர்த்தி சிவாகாமி அம்மனுடன் வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரதோஷ மூர்த்திகளாக எழுந்தருளி கோயிலின் உட்பிரகாரத்தை சுற்றி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
    அதேபோல மேலக்கோயில் என்று அழைக்கப்படும் ஆதிதிருத்தளிநாதர் ஆலயத்திலும் நந்தீஸ்வர்ருக்கு உற்சவ மூர்த்தியான ஆதிதிருத்தளிநாதருக்கும் 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.   புதுப்பட்டியில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயத்திலும் சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனை காட்டப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai