Enable Javscript for better performance
"நாட்டின் கலாசாரத்தை முழுமையாக அறிய வரலாறு படிப்பது அவசியம்'- Dinamani

சுடச்சுட

    

    "நாட்டின் கலாசாரத்தை முழுமையாக அறிய வரலாறு படிப்பது அவசியம்'

    By DIN  |   Published on : 31st March 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஒரு நாட்டின் கலாசார நுணுக்கங்களை முழுமையாக அறிந்து கொள்ள,  அந்த நாட்டின் வரலாற்றை படிப்பது அவசியம் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சொ. சுப்பையா கூறினார்.
    காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறை சார்பில் இந்தியாவை உருவாக்குதல் - பாரம்பரிய பண்பாடும் இன்றைய நவீனமும்,  உள்நாட்டு மற்றும் உலகளாவிய சவால்கள் என்ற தலைப்பிலான கருத்தரங்கம் புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய 2 நாள்கள் நடைபெற்றன.  கருத்தரங்க தொடக்க விழாவில் துணைவேந்தர் சொ. சுப்பையா தலைமை வகித்துப் பேசியது: 
    இந்தியாவின் சிறந்த கலாசாரத்தை உலக நாடுகள் அனைத்தும் போற்றுகின்றன. கல்வியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று ஒரு நாட்டின் பண்பாட்டையும்,  கலாசாரத்தையும் அடுத்த தலைமுறையினருக்கு எடுத்துச் செல்வதாகும். ஒரு நாட்டின் கலாசார நுணுக்கங்களை முழுமையாக அறிந்துகொள்ள வரலாறு படிப்பது மிகவும் அவசியமானது என்றார்.
    விழாவில்,  வருகைதரு பேராசிரியர் என். ராஜேந்திரன் கருத்துரையாற்றினார். மலேசியா பேராசிரியர் ஜெயகோபி தாமோதரம் சிறப்புரையாற்றினார். அழகப்பா பல்கலைக்கழக கலைப்புல முதன்மையர் கே. மணிமேகலை வாழ்த்திப் பேசினார். கருத்தரங்கில் 85 ஆராய்ச்சிக் கட்டுரைகள் சுருக்கம் கொண்ட மலரை துணைவேந்தர் வெளியிட் டார்.
    முன்னதாக வரலாற்றுத் துறைத் தலைவர் (பொறுப்பு) கே. கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். முடிவில் பேராசிரியர் ஜி. பரந்தாமன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai